Sunday, May 4, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபட வசதிகள் ஏற்படுத்தப்படும்

மடு தேவாலயத்தை இடையூறின்றி வழிபட வசதிகள் ஏற்படுத்தப்படும்

மன்னார் – மடு ​தேவாலயத்திற்கு வருவோர் இடையூறின்றி வழிபாடுகளில் ஈடுபடுவாற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார்.

மடு மற்றும் சிவனொலிபாத மலை போன்ற புனித தளங்களுக்கான நுழைவு வீதிகள் அவற்றை வழிப்பட வருவோருக்காகவே அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்து தண்டப்பணம் அறவிடுவது நியாமற்றதெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மடு தேவாலயத்தில் வழிபாட்டுக்காக வருவோர் கைது செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக அது குறித்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு அறிவிக்கும்படியும் ஜனாதிபதி இதன்போது அறிவித்தார்.

மன்னார் மாவட்டச் செலயகத்தில் நேற்று (16) நடைபெற்ற விசேட மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மடு தேவாலயத்தை வழிபட வருவோருக்காக தேவாலய நுழைவு வீதியின் இரு புறங்களையும் தூய்மைப்படுத்தி அபிவிருத்தி பணிகளை செய்யுமாறு இராணுவத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி, அந்த பணிகளுக்காக மன்னார் மறை மாவட்ட ஆயரின் பிரதிநிதி ஒருவர், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர், வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் பொலிஸாரை தொடர்பு படுத்திக்கொண்டு செயற்படுமாறும் அறிவுறுத்தினார்.

எதிர்வரும் நாட்களில் நடக்கவிருக்கும் மடு தேவாலயத்தின் உற்சவத்திற்கு முன்னதாக தூய்மைப்படுத்தல் பணிகளை நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles