கொஹுவல சந்தியில் நிர்மாணிக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் காரணமாக நாளை (15) முதல் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான நிர்மாணப் பணிகள் 02 மாத காலத்திற்கு மேற்கொள்ளப்படவுள்ளதால், அக்காலப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை தெரிவித்துள்ளனர்.
மேலும், கொஹுவல பாலத்தை நோக்கி பயணிக்கும் கனரக வாகனங்களின் நுழைவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.