Thursday, June 11, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுடிப்பர் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

டிப்பர் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்டு ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (12) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் வீதியில் நடந்து சென்ற குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் குருணாகலை சேர்ந்த 34 வயதுடைய குடும்பஸ்தர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles