பொலன்னறுவை – வெலிகந்த, நாமல்கம கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் வீடொன்றிலிருந்து வயல்வெளிக்கு இழுக்கப்பட்ட மின்சார கேபிளில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகந்த நாமல்கம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும் இருவருடன் வயலுக்குச் சென்று கொண்டிருந்த வேளையில் சட்டவிரோதமாக வயலில் பொறுத்தப்பட்டிருந்த மின் கேபிளில் சிக்கி அவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.