காலி – ஹபராதுவ, ரூமஸ்ஸல கடற்பரப்பில் நேற்று (11) இரவு மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நூகதூவ மற்றும் மாகல்ல பகுதியை சேர்ந்த மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர்.
காலி – தெவெட்ட கடலில் இருந்து நேற்று புறப்பட்ட ஒரு நாள் மீன்பிடி படகே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது, இந்தக் கப்பலில் மூன்று மீனவர்கள் இருந்துள்ளனர்.
இந்நிலையில், கரைக்கு வந்த மீனவர் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன மீனவர்களை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.