Saturday, April 19, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகணேமுல்ல சஞ்சீவவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

வீரகுல பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் தலைவரும் பிரபல போதைப்பொருள் வியாபாரியுமான கணேமுல்ல சஞ்சீவவை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா நீதவான் சிலானி பெரேராவினால் இன்று (10) பிறப்பிக்கப்பட்ட உத்தரவிற்கு அமையவே கணேமுல்ல சஞ்சீவ எதிர்வரும் 24 ஆம் திகதி வரை பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்படவுள்ளார்.

‘கணேமுல்ல சஞ்சீவ’ என்று அழைக்கப்படும் சஞ்சீவ குமார கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles