Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடனான ஒப்பந்தங்கள் மீண்டும் மீறப்பட்டால் நாடு பின்னடையும்

IMF உடனான ஒப்பந்தங்கள் மீண்டும் மீறப்பட்டால் நாடு பின்னடையும்

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்கள் மீறப்படுமானால் நாடு பின்னோக்கிச் செல்லும். எனவே அந்த உடன்படிக்கைகள் அனைத்தையும் அமுல்படுத்த, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பு என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளின் பிரகாரம் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக பேணுவதற்கு பல பொருளாதார இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாகவும், அந்த இலக்குகளை மீறுவது நாட்டின் பொருளாதாரத்தை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அரசியல் இலாபத்திற்காக மேடைகளில் வீணாகப் பேசிக் கொண்டிருக்காமல் நடைமுறையில் இருக்கும் கட்டமைப்பிற்குள் மாத்திரம் பேசுவது எதிரணியின் பொறுப்பு எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நாட்டிற்கான பொறுப்புகளை ஏற்காமல், சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சிகள் தொடர்ந்தும் எதிர்க்கட்சியில் இருப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த சவாலை அச்சமின்றி ஏற்றுக்கொண்டதால் , அரசாங்கம் அதன் வெற்றிகரமான முடிவுகளை இன்று வெளிப்படுத்தியுள்ளதாகவும், எனவே நாட்டு நலனுக்காக அனைவரையும் ஒரே பாதையில் பயணிக்க அழைப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான “உறுமய” முழுமையான காணி உறுதிப் பத்திரம் வழங்கல் மற்றும் அரிசி மானியம் வழங்கும் நிகழ்வு கரவனெல்ல ஸ்ரீ விசுத்தாராமவில் நேற்று (04) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

“உறுமய” நிரந்த காணி உறுதிப் பத்திரம் வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தின் ஒரு கட்டமாக கேகாலை மாவட்டத்தில் 350 காணி உறுதிப் பத்திரங்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கினார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 800 குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கப்பட்டது.

Keep exploring...

Related Articles