Friday, April 17, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது

மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது

இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையின் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போதே, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இதனை தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட​ வேண்டும் என உயர்நீதிமன்ற தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன்போது தெரிவித்தார்.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles