Monday, April 21, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதொட்டலங்க பொட்டியின் வீட்டிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு

தொட்டலங்க பொட்டியின் வீட்டிலிருந்து போதைப்பொருட்கள் மீட்பு

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ‘தொட்டலங்க பொட்டி’ என்பவரின் கிராண்ட்பாஸ் வீட்டை சுற்றிவளைத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஒன்றரை மில்லியன் ரூபா பெறுமதியான பணம், ஹெரோயின் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள்களை கைப்பற்றியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கைகளுடன் இணைந்து நேற்று (03) கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகலான் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது இந்த போதைப்பொருள் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்போது 264 கிராம் ஹெரோயின், 760 போதை மாத்திரைகள், 11,593,000 ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன சந்தேகத்திற்கு இடமின்றி கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles