Sunday, April 20, 2025
29 C
Colombo
செய்திகள்விளையாட்டுதென்னாபிரிக்காவிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி

தென்னாபிரிக்காவிடம் படுதோல்வியடைந்த இலங்கை அணி

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் நேற்று இடம்பெற்ற முதற்சுற்று போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுக்களால் தென்னாபிரிக்கா அணி வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படிஇ முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் 19 ஓட்டங்களையும் மற்றும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 16 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் என்ரிச் நோர்ட்ஜே அதிகப்படியாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, 78 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 16.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

தென்னாபிரிக்கா அணி சார்பில் டி கொக் அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles