இலங்கையில் ஆகஸ்ட் மாதம் அளவில் பெரும் உணவு நெருக்கடி ஏற்படக்கூடும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
உலகளவில் ஆகஸ்ட் மாதத்துக்குப் பின்னர் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.
அதற்கு இலங்கை எவ்வாறு முகம் கொடுக்கும் என்பது தொடர்பாக அரசாங்கம் ஆலோசித்து வருகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையில் இலங்கையின் உணவு பாதுகாப்பு குறித்த திட்டங்கள் வகுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.