பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், 22 பேர் காயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பெண்களும் சிறுவர்களும் அடங்குவதுடன், காயமடைந்தவர்கள் உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலூசிஸ்தான் மாகாணம், டர்பத் நகரிலிருந்து க்வெட்டா (Quetta) நகரை நோக்கி நேற்று (29) சென்றுகொண்டிருந்த பயணிகள் பஸ் வாஷுக் (Washuk) எனும் பகுதியில் ஒட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.
கூட்ட நெரிசலுடன் மலைப்பாங்கான சாலையில் பஸ் சென்று கொண்டிருந்தது போது திடீரென அதன் முன்பக்க டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பில் மோதி சுமார் 50 அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்துள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துள்ளார்.