கஹதுடுவ வேதர வைத்தியசாலைக்கு முன்பாக பயணித்த கார், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து சென்றுக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வேதர மகா வித்தியாலத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார்.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பிலியந்தலையிலிருந்து கஹதுடுவ நோக்கிச் சென்ற காரின் வலதுபுறப் பின்பக்க டயர் வெடித்ததால், சாரதிக்கு காரைக் கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காரின் சாரதியான 29 வயதான நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.