Monday, April 21, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு பொதியில் தோன்றிய மட்டைத்தேள்

உணவு பொதியில் தோன்றிய மட்டைத்தேள்

கடந்த வெள்ளிக்கிழமை திருநெல்வேலி பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில் மதிய உணவு வாங்கிய ஒருவரின் உணவு பொதியில் மட்டைத்தேள் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகருக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்தது.

இதனையடுத்து சனிக்கிழமை குறித்த உணவகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது பொது சுகாதார பரிசோதகரால் ஏற்கனவே வழங்கப்பட்ட திருத்த வேலைகள் எவையும் நிவர்த்தி செய்யப்படாமல் இருப்பது அவதானிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து திங்களன்று (27) கடை உரிமையாளருக்கு எதிராக மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதவான், உரிமையாளரிற்கு 45,000 ரூபா தண்டம் அறவிட்டதுடன் கடையினை திருத்த வேலைகள் முடிவடையும் வரை சீல்வைத்து மூடுமாறு பொது சுகாதார பரிசோதகருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர், குறித்த உணவகத்தை நேற்றைய தினம் சீல் வைத்து மூடினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles