Wednesday, December 3, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 19 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட மேலும் 19 பேர் களுவாஞ்சிக்குடி கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போது அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளது.

அவர்களில் 12 வயது சிறுவன் ஒருவனும், பெண் ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு கடல் வழியாக செல்ல முற்பட்ட 21 பேர் மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பு, தர்மபுரம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles