தோஹாவில் இருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு சென்ற கத்தார் ஏர்வேஸ் விமானம் நடுவானில் திடீரென குலுங்கியதால் 12 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும் குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக டப்ளின் விமான நிலையம் அறிவித்துள்ளது.
சம்பவத்தின் போது, சில பயணிகள் விமானத்தின் மேல் தூக்கி எறியப்பட்டு விமானத்தின் மேற்கூரையில் மோதியதாக வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பயணிகள் கூறினர்.
கடந்த வாரமும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் குலுங்கியதில் ஒரு பயணி உயிரிழந்ததுடன் 80 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவங்களால் போயிங் விமானங்களின் பாதுகாப்பு விவரக்குறிப்புகள் குறித்து மீண்டும் சர்ச்சையான சூழல் ஏற்பட்டுள்ளது.