Thursday, June 18, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டு5 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரியுடன் ஒருவர் கைது

5 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரியுடன் ஒருவர் கைது

பேருவளை பிரதேசத்தில் வர்த்தகர்கள் குழு ஒன்றிற்கு சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரியை விற்பனை செய்ய முற்பட்ட நபர் ஒருவர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய மீனவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வலம்புரியை கொள்வனவு செய்யும் போர்வையில் இந்த மீனவர் கட்டுநாயக்க 18 கனுவ சந்திக்கு வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இன்று (27) மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles