ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களை விசாரிப்பதற்காக பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் அண்மையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.