சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் நாட்களில் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது 23,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு வேகமாகப் பரவி வருகின்றது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இவ்வருடம் டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 09 ஆக உயர்ந்துள்ளது.