Thursday, October 9, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி திடீர் மரணம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கைதி திடீர் மரணம்

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் நேற்று (20) பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கடந்த டிசெம்பர் 13 ஆம் திகதி அன்று ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மாலிம்பட பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கைதி கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (20) உயிரிழந்துள்ளார்.

பலட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles