அனுராதபுரம் – கண்டி வீதியில் மோட்டார் சைக்கிள் மீது மரமொன்று முறிந்து விழுந்ததில் பொலிஸ் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அனுராதபுரம் – கண்டி வீதியில் காவக்குளம சந்தியில் இன்று (17) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (17) காலை 7.30 மணியளவில் இந்த துரதிஷ்டவசமான விபத்தை சந்தித்துள்ளனர்.
இந்த இரண்டு அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வீதிக்கு அருகில் இருந்த மரம் ஒன்று அவர்கள் மீது விழுந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அனுராதபுரம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.