Friday, May 2, 2025
27.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைக் கைதிகளுக்கு நாளை விடுமுறை

சிறைக் கைதிகளுக்கு நாளை விடுமுறை

நல்லொழுக்கத்துடன் இருக்கும் 101 கைதிகளுக்கு நாளை முதல் வீடுகளுக்கு சென்று வர விடுமுறை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறைச்சாலைகளுக்குள் நடத்தப்படும் சமய, தொழில் கல்வி பயிற்சிகள் உட்பட சிறைச்சாலை புனர்வாழ்வு செயற்பாடுகளுக்கு பங்களிப்பு செய்து நல்லொழுக்கத்துடன் செயற்பட்ட 101 கைதிகளுக்கே இவ்வாறு விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இந்த கைதிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை 7 , 10 மற்றும் 14 நாட்கள் என இரண்டு முறை விடுமுறை வழங்கப்படும்.

விடுமுறையில் சென்று சிறப்பாக மற்றும் பலன் அளிக்கும் வகையில் தமது உறவினர்களுடன் காலத்தை செலவிட்டு, திரும்பும் கைதிகளை சிறைச்சாலை அனுமதி சபையில் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles