இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பற்றீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
மலக் கழிவுகளால் டைபொய்ட் பற்றீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பற்றீரியா பரவுகிறது.
வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.
இந்த பற்றீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது.
எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.