மாத்தறை நுபே ரயில் நிலைய கடவையில் நேற்று (16) மாலை ரயிலில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயிலில் மோதி குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.