Friday, May 9, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி

இந்தோனேசியா செல்கிறார் ஜனாதிபதி

இந்தோனேசியாவில் நடைபெறவுள்ள 10ஆவது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.

அதன்படி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இந்தோனேசியா விஜயத்தில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 20ஆம் திகதி நடைபெறவுள்ள மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்திற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை வெளியிடுவார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

10வது உலக நீர் உச்சி மாநாட்டின் உயர்மட்ட கூட்டம் இந்தோனேசியாவின் பாலி நகரில் மே 18 முதல் 25 வரை நடைபெறுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles