Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உலகம்சிங்கப்பூரின் நீண்ட கால பிரதமர் பதவி விலகுகிறார்

சிங்கப்பூரின் நீண்ட கால பிரதமர் பதவி விலகுகிறார்

சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

20 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அவர், ஆட்சி அதிகாரத்தை துணை பிரதமரும் நிதியமைச்சருமான லோரன்ஸ் வோங்கிடம்(Lawrence Wong) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு சுதந்திர நாடாக உருவாகியதிலிருந்து 3 பிரதமர்கள் மாத்திரமே  அங்கு ஆட்சி செய்துள்ளனர்.

நாட்டின் முதலாவது பிரதமரும் நவீன சிங்கப்பூரின் ஸ்தாபகர் என அழைக்கப்படுபவருமான Lee Kuan Yew, 25 ஆண்டுகள் பதவி வகித்திருந்தார்.

Lee Kuan Yew-இன் மகனே தற்போது பதவியை இராஜினாமா செய்துள்ள Lee Hsien Loong ஆவார்.

இவரது பதவி விலகலுடன் சிங்கப்பூரில் லீ  குடும்பத்தின் அரசியல் சகாப்தம் நிறைவிற்கு வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles