பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் கொலை சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை ஆரம்பமாகியுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று (14) நீதிமன்றில் தெரிவித்தது.
ஷாப்டரின் கையடக்கத் தொலைபேசி தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் கோரப்பட்ட இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, தொலைபேசி தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அழைக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் நினைவூட்டல் ஒன்றை உரிய அதிகாரிகளிடம் அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.