Monday, March 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுமியை வன்புணர்ந்து தலைமறைவாகியிருந்த இளைஞன் கைது

சிறுமியை வன்புணர்ந்து தலைமறைவாகியிருந்த இளைஞன் கைது

சிறுமியை வன்புணர்ந்து கலென்பிந்துனுவெவ நகரில் பதுங்கியிருந்த நபரை கொக்காவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கொக்காவெவ, தெய்தெல்லேவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

17 வயதுடைய சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்த போது, ​​சந்தேக நபர் வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிறுமி தனது பெற்றோருக்குத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் கொக்காவெவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், சந்தேகநபரை கைது செய்து நேற்று (13) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை நாளை (15) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கவெவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles