இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று (14) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டது.
இலங்கை அணி முதலில் எமிரேட்ஸ் விமானம் EK-651 இல் டுபாய்க்கு புறப்பட்டு அங்கிருந்து அமெரிக்காவின் நியூயோர்க் செல்லவுள்ளது.
இலங்கை அணியின் 15 வீரர்கள், 04 மேலதிக வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுடன் 25 பேர் கொண்ட குழு அமெரிக்கா சென்றதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடைபெற உள்ளது.