இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவசமாக அரிசியை வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டம் கடந்த மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
குறைந்த வருமானம் பெறும் 34 இலட்சம் குடும்பங்களுக்கான அரிசியை இலவசமாக வழங்கும் திட்டத்தின் 2ஆம் கட்ட நடவடிக்கைகள் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும்.
இதன்படி மாவட்ட செயலகங்கள் ஊடாக தலா 10 கிலோகிராம் அரிசியை இலவசமாக வழங்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்