பதுளை கஹட்டருப்ப வீதியில் நேற்று (12) மாலை பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராதுருகொட்ட பொலிஸ் நிலையத்தில் இருந்து விசேட கடமைகளுக்காக கஹட்டருப்ப பொலிஸ் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகளே இவ்விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கஹட்டருப்ப பகுதியில் இருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து குறித்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தின் பின்னர், காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கஹட்டருப்ப பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.