Thursday, March 13, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரண இல்லத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மரண இல்லத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

நிட்டம்புவ – திஹாரிய பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.

குறித்த நபரும் மேலும் நால்வரும் இணைந்து அப்பகுதியில் உள்ள மரண இல்லம் உள்ள வீதியில் மின் விளக்குகளை பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸாரின் விசாரணைகளின் போது மின்விளக்குகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட வயர் வீதியில் இருந்த உயர் மின் கம்பியில் மோதியதில் குறித்த நபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் திஹாரியா கலகெடிஹேன பிரதேசத்தை சேர்ந்த 40 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஏனைய நால்வரும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நிட்டம்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles