Saturday, September 21, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமசகு எண்ணெய் கப்பலுக்கு தாமத கட்டணம் 28 இலட்சம் டொலர்களாம்

மசகு எண்ணெய் கப்பலுக்கு தாமத கட்டணம் 28 இலட்சம் டொலர்களாம்

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டு இன்றுடன் (19) இரண்டு மாதங்கள் கடந்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கான ஊழியர்களின் சம்பளத்திற்காக 3200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக எரிபொருள், துறைமுகங்கள் மற்றும் மின்சாரத்திற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மசகு எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு நிலையம் கடந்த மார்ச் 19ஆம் திகதி மூடப்பட்டது.

இந்நிலையில், சுத்திகரிப்பு மற்றும் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், ஊழியர்களுக்கு மாதாந்த சம்பளம் வழங்க 160 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 25ஆம் திகதி நாட்டிற்கு வந்த மசகு எண்ணெய் தாங்கி தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்ட காரணமாக நாளொன்றுக்கு 120,000 டொலர்கள் தாமத கட்டணமாக செலுத்த வேண்டியுள்ளது.

அதற்கமைய, தற்போது 2.8 மில்லியன் டொலர்கள் தாமத கட்டணமாக செலுத்தப்பட வேண்டியுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்கி, மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டீசலை மக்களுக்கு வழங்குவதன் மூலம் டீசல் நெருக்கடிக்குத் தீர்வைக் காண முடியும் என அந்த கூட்டமைப்பு மேலும் தெரிவித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles