Thursday, September 19, 2024
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சை விஞ்ஞான வினாத்தாளிலும் சிக்கல்

சாதாரண தர பரீட்சை விஞ்ஞான வினாத்தாளிலும் சிக்கல்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு அமைவாக அண்மையில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

விஞ்ஞானப் பாடம் தொடர்பான வினாத்தாளில் மூன்று பல்தேர்வு வினாக்கள் மற்றும் மூன்று கட்டுரை வினாக்கள் தொடர்பாக ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திடம் வினவியதாகவும் மதுர விதானகே தெரிவித்தார்.

இதன்போது, பரீட்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் நடத்தப்படும் புள்ளிகள் வழங்கல் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வின் போது, ​​இது தொடர்பில் கலந்துரையாடி, மாணவர்களுக்கு அநீதி ஏற்படாத வகையில் புள்ளிகளை வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மேலும் கூறினார்.

வெடிபொருட்களுடன் நால்வர் கைது

வெடிபொருட்களுடன் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவுல - நிகுல வீதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, மூன்று...

Keep exploring...

Related Articles