Wednesday, June 24, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பரவலாக இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் அதிகளவில் காணப்படுவதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு இன்று (09) இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் குறித்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles