Tuesday, September 17, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பாறையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

அம்பாறையில் முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில் அதிகளவில் முதலைகள் நடமாட்டம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது மாவடிப்பள்ளி பாலம் சம்மாந்துறை பகுதி ,ஒலுவில் பகுதி ,நிந்தவூர் ,மருதமுனை, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு ,கிட்டங்கி, நாவிதன்வெளி, உள்ளிட்ட பகுதிகளை அண்மித்த ஆற்றை விட்டு இரவிலும் பகலிலும் முதலைகள் வெளியேறுவதனால் வீதியால் செல்லும் பயணிகள் மற்றும் பாதசாரிகள் அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான முதலைகள் வெளியேறுவதாக மக்கள் தெரிவிக்கினறனர்.

மேற்படி பகுதிகளில் உள்ள வாவிகள் குளங்களிலும் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

தற்போது, சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ளதனால் வயல் நிலங்கள் கால்வாய்கள் அண்டிய பகுதியில் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் முதலைகளின் இரைக்குள்ளாகின்றன.

மேற்படி பகுதிகளில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்து காணப்படுகிறதுடன், முதலைகளின் பெருக்கம் சம்பந்தமாக உரிய இடங்களில் அறிவுறுத்துதல்கள் எச்சரிக்கை பலகைகள் உரிய இடங்களில் இதுவரை வைக்கப்படவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

முதலை அபாயம் தெரியாமல் இப்பகுதியில் மக்கள் செல்வதால் முதலையின் பிடிக்குள் அகப்படும் சாத்தியம் உள்ளது.

இதை உரிய அதிகாரிகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

Keep exploring...

Related Articles