முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி, கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்துச் சம்பவமொன்றையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.