Wednesday, April 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'மன்னா ரமேஷை' தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

‘மன்னா ரமேஷை’ தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை மேற்கொள்ளும் குழுவின் தலைவன் எனக் கருதப்படும் மன்னா ரமேஷ் என்ற ரமேஷ் பிரியஜனகவை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு இணங்க, சர்வதேச பொலிஸாரின் சிவப்பு உத்தரவின் பேரில் டுபாயில் கைது செய்யப்பட்ட மன்னா ரமேஷ் இன்று காலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தார்

அவிசாவளை பிரதேசத்தை மையமாக கொண்டு வர்த்தகர்களிடம் கப்பம் பெறுதல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகள் என மன்னா ரமேஷ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மேற்கு தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles