Saturday, January 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிசா கட்டணம் குறித்து அரசின் தீர்மானம்

விசா கட்டணம் குறித்து அரசின் தீர்மானம்

வெளிநாட்டவர்கள் எமது நாட்டுக்கு வரும்போது 30 நாள் விசா அனுமதிக்காக அறவிடப்பட்ட 50 டொலர் கட்டணத்தை மாற்றமின்றி தொடர்ந்தும் பேண அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இந்தியா, சீனா, ரஷ்யா, ஜப்பான் , மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய ஏழு நாடுகளுக்கு இதுவரை வழங்கப்பட்ட இலவச விசா சேவையை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாட்டவர் ஒருவர் நாட்டிற்குள் நுழையும் போது அதற்கான விசா விநியோகிக்கும் முழுப் பொறுப்பையும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் ஏற்கும்.

சுற்றுலாத் துறை நாட்டுக்குள் புத்துயிர் பெற்று வரும் நிலையில் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகின்ற வேளையில் அறவிடப்படும் விசா கட்டணத்தை தொடர்ச்சியாக 50 டொலர்கள் என்ற வரையறைக்குள் பேணுமாறு அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோது சுற்றுலாத் துறையினர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது சுற்றுலாத்துறையின் எதிர்காலத்துக்கு பெரும் பக்கபலமாக அமையுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதன்படி இந்த விடயத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்பித்த பின்னர் அமைச்சரவை அதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles