டுபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த ‘மன்னா ரமேஷ்’ என்ற ரமேஷ் பிரிஜனக்க இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
இன்று (07) அதிகாலை 4.45 மணியளவில் டுபாயில் இருந்து வந்த இலங்கை விமானம் மூலம் அவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக விமான நிலையத்தில் உள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தொழிலதிபர்களுக்கு கொலைமிரட்டல் விடுத்து மிரட்டி கப்பம் கோருதல் மற்றும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மன்னா ரமேஷ் அண்மையில் டுபாயில் பதுங்கியிருந்தபோது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டார்.