Thursday, January 16, 2025
27.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுT20 உலக கிண்ண போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

T20 உலக கிண்ண போட்டிக்கு தீவிரவாத அச்சுறுத்தல்

எதிர்வரும் இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது கரீபியன் தீவுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ISIS குழு ஒன்றின் ஊடாக உலகக் கிண்ணப் போட்டிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படலாம் என தகவல்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இருபதுக்கு20 உலகக் கோப்பை போட்டிகள் ஆன்டிகுவா, பர்புடா, பார்படாஸ், கயானா, செயின்ட் லூசியா, செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடின்ஸ் மற்றும் டிரினிடேட் அன்ட் டொபேகோ ஆகிய நகரங்கள் நடைபெறவுள்ளன.

அதுமட்டுமின்றி அமெரிக்காவின் புளோரிடா, நியூயோர்க், டெக்சஸ் ஆகிய நகரங்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன.

எனினும:, அமெரிக்காவில் நடைபெறும் போட்டிகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்பட்ட ஏதேனும் அபாயங்களை நிவர்த்தி செய்ய ஒரு ‘விரிவான மற்றும் வலுவான பாதுகாப்பு திட்டம்’ நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் உறுதியாக நம்பலாம் என சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி ஜானி கிரேவ்ஸ் தெரிவித்தார்.

இதேவேளை, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து வருவதாக கரீபியன் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles