மீரிகம – கடவத்தை நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்தமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு திட்டப் பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மீரிகம – கடவத்தை நெடுஞ்சாலையின் பெம்முல்ல, கடஒலுவாவ பகுதியில் உள்ள நெடுஞ்சாலையின் ஒரு பகுதி நேற்று (05) இடிந்து விழுந்துள்ளது.