Thursday, October 9, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசாதாரண தர பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

சாதாரண தர பரீட்சை இன்று முதல் ஆரம்பம்

2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று முதல் ஆரம்பமாகின்றது.

இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை குறித்த பரீட்சை நடத்தப்படவுள்ளது.

நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles