யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட திடீர் விசேட நடவடிக்கையின் போது 30 கிலோ 500 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இன்று (06) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது மேற்படி சந்கேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 36,35 ஆகிய வயதுடைய இரு நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து 30 கிலோ 500 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா ஆகியவை மருதங்கேனி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸ் பிரிவினருடன் இணைந்து மருதங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.