Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉலகில் வேகமாக வலுவடைந்து வரும் நாணயமாக மாறும் இலங்கை ரூபா

உலகில் வேகமாக வலுவடைந்து வரும் நாணயமாக மாறும் இலங்கை ரூபா

உலகில் வேகமாக வளர்ச்சியடையும் நாணயங்களில் ஒன்றாக இலங்கை ரூபா மாறியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உலகின் ஏனைய நாணயங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் மாத்திரம் இலங்கை ரூபாவின் மதிப்பு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதல் நான்கு மாதங்களில், அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 9.1% ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன், யூரோவிற்கு எதிராக 12.7% அதிகரித்துள்ளது. ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதி 10.8% மற்றும் சீன யுவானுக்கு எதிராக 11.4% அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜப்பானிய யெனுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு 21% ஆகவும் இந்திய ரூபாவுக்கு எதிராக 9.5% ஆகவும் அவுஸ்திரேலிய டொலருக்கு எதிராக 14.2% ஆகவும் அதிகரித்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles