Tuesday, November 25, 2025
27 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைப்பு

ஒரு கோடி ரூபா பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைப்பு

வெள்ளவவாய பிரதேசத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான கஞ்சா தோட்டமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கரடகொல்ல, அம்பதென்ன பிரதேசத்தில் பாரியளவில் நடத்தப்பட்டு வந்த கஞ்சா தோட்டமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

28,475 கஞ்சா செடிகள் பொலிஸ் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றின் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கஞ்சா செடிகள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles