கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், நாட்டின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் பிரகாரம், இலங்கையின் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 1.5% வரை அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 0.9 வீதமாக பதிவாகியிருந்தது.