பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (02) நண்பகல் 12.00 மணி முதல் தொடர்ச்சியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் தலைவர் தம்மக எஸ்.பிரியந்த தெரிவித்தார்.
15% சம்பளக் குறைப்பு மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்திர இழப்பீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.