யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் லேண்ட் மாஸ்டர் மற்றும் ஹயஸ் ரக வேன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் நுணாவில் பகுதியில் இன்றைய தினம் காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லேண்ட் மாஸ்டரில் பயணித்த ஐவரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மூவர் படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹயஸ் வாகனத்தில் பயணித்த சிறுமி மற்றும் லேண்ட் மாஸ்டர் சாரதி ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த ம.சதீஸ்குமார் என்பவரே படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொழும்பில் இருந்து வெளிநாட்டவர்களை ஏற்றிக் கொண்டு யாழ் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஹயஸ் வேன், முன்பாக பயணித்துக் கொண்டிருந்த லேண்ட் மாஸ்டரின் பின்னால் சென்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்துத் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.