27 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டு சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்து பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை விடுதலை செய்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
இந்த குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராக சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.